ஆலிவ் ரெட்லி ஆமை கரை ஒதுங்கியதால் பரபரப்பு... வனத்துறையினர் விசாரணை!

 
ஆலிவ் ரெட்லி ஆமை

தூத்துக்குடி மாவட்டம் அருகே உள்ள கோவளம் கடற்கரையில் சுமார் 60 கிலோ எடையுள்ள ஆலிவ் ரெட்லி ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

ஆமை

தூத்துக்குடி முள்ளக்காடு ஊராட்சிக்குள்பட்ட கோவளம் கடற்கரையில் இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக வனத்துறையினருக்குக் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் உத்தரவின்படி, வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஆய்வு மேற்கொண்டார். 

ஆமை

இது ஆலிவ் ரெட்லி ரக ஆமை என்பதும், இது மீனவர்களின் வலைகளில் சிக்கி காயமடைந்தோ, அல்லது பிற உயிரினங்களால் தாக்கப்பட்டோ இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, உயிரிழந்த ஆமை கால்நடை மருத்துவர்கள் மூலம் உடல்கூராய்வு செய்யப்பட்டு, பின்னர் கடற்கரையில் புதைக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?