ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலுக்கு புதிய தலைவர் நியமனம்!
ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தலைவராக இருந்த இந்தியாவின் ரந்தீர் சிங் உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டது.
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், கத்தாரைச் சேர்ந்த ஷேக் ஜோவான் பின் ஹமாத் அல் தானி போட்டியின்றி புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2028 ஆம் ஆண்டு வரை அந்த பொறுப்பில் தொடர உள்ளார்.
ஷேக் ஜோவான் தற்போது கத்தார் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை கத்தாருக்கு பெற்றுத்தருவதே அவரது முக்கிய இலக்காக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
