சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம்… எதிர்க்கட்சிகள் அதிரடி நடவடிக்கை!
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் லோக்சபா செக்ரட்டரி ஜெனரல் உத்பல் குமார் சிங் அலுவலகத்திற்கு சென்று நோட்டீஸ் வழங்கினர். இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த நோட்டீஸை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு லோக்சபா செக்ரட்டரி ஜெனரலிடம் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார். சபாநாயகரை நீக்கும் தீர்மானம் மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியில் விவாதத்திற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானம் முடிவுக்கு வரும் வரை சபாநாயகர் நாற்காலியில் அமராமல் இருப்பதாக ஓம் பிர்லா முடிவு செய்துள்ளார். விதிமுறைகளின்படி சபாநாயகர் தனது பணிகளை தொடரலாம் என்றாலும் தார்மீக அடிப்படையில் இந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
