அதிகாலையில் அதிர்ச்சி... ஆம்னி பேருந்து–லாரி மோதி விபத்து… ஓட்டுநர் உயிரிழப்பு, 20 பேர் படுகாயம்!
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து சிமென்ட் மூலப்பொருட்கள் ஏற்றிய லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் படையப்பா (எ) ராஜீவ்காந்தி (38) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பேருந்தில் கூடுதல் ஓட்டுநர் மாஸ் (21) உட்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவத்துக்குப் பின்னர் வாழப்பாடி மற்றும் ஏத்தாப்பூர் போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சிக்கியவர்களை மீட்டனர். காயமடைந்த ஓட்டுநர் ராஜீவ்காந்தி இரு வாகனங்களுக்கு இடையில் சிக்கிய நிலையில் காப்பாற்ற முயற்சி செய்தார், ஆனால் உயிரிழந்தார். இந்த விபத்து காரணமாக சேலம்–சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
