ஆம்னி பேருந்து கவிழ்ந்து கோர விபத்து: வாலிபர் பலி; 10 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
ஆம்னி

சென்னையிலிருந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.

சென்னையிலிருந்து நேற்றிரவு பயணிகளுடன் சேலம் நோக்கி ஒரு ஆம்னி பேருந்து புறப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பாதூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் (Center Median) பலமாக மோதி நடுரோட்டிலேயே கவிழ்ந்தது. பேருந்துக்குள் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில், இந்த விபத்து நிகழ்ந்ததால் அங்குக் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

விபத்து

விபத்து குறித்துத் தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இந்த விபத்தில் நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த ஜியாவுதீன் (25) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலை தற்கொலை வெட்டி மரணம் விபத்து

விபத்துக்குள்ளான பேருந்து சாலையின் குறுக்கே விழுந்து கிடந்ததால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர், ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு பேருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, சுமார் 2 மணி நேரத்திற்குப் பின் போக்குவரத்துச் சீரானது.விபத்து குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநர் தூங்கியதால் விபத்து நேரிட்டதா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!