ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து... 10 பேர் படுகாயம்!
கர்நாடகா: சிவமொகா நகரில் இருந்து பெங்களூரு செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 40 பயணிகளுடன் சென்ற பேருந்தில் லேசாக தீப்பற்றியதும் டிரைவர் உடனே பேருந்தை ஓரமாக நிறுத்தி பயணிகளை அவசரமாக இறக்கினார். இதில் 10 பயணிகள் லேசான காயங்களை அடைந்தனர்.
பொறியியல் காரணமாக, இன்ஜின் பகுதியில் உள்ள மின் வயர்களில் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பேருந்து முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
ஓட்டுநர் எச்சரிக்கையாக உடனடியாக செயல்பட்டதால் 40 பயணிகளும் அதிர்ஷவசமாக உயிர் தப்பினர். இது சமீபகாலத்தில் கர்நாடகாவில் நடந்த பல பேருந்து தீ விபத்துகளின் தொடர்ச்சியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து நடைமுறைகளை மேலும் தீவிரமாக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
