நவம்பர் 23ம் தேதி மத்திய அரசை எதிர்த்து தஞ்சாவூர்–திருவாரூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 
திமுக
நெல் ஈரப்பத அளவில் தளர்வு வழங்க வேண்டிய தமிழ்நாட்டின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு நிராகரித்துள்ளதால், டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பில் உள்ளதாக மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகரித்த நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டுமென்ற மாநில அரசின் வேண்டுகோள் பிரதமரின் கவனத்திற்கு கூட செல்லவில்லை என கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

விவசாயிகள் எதிர்கொண்ட இழப்புக்கான நிவாரணம் வழங்கப்படாததோடு, ஈரப்பத அளவிலும் தளர்வு செய்யாத மத்திய அரசு, டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலத்தின் கோரிக்கைகளை மறுபரிசீலித்து, வேளாண் பெருங்குடி மக்களுக்கு நன்மை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

இதனை எதிர்த்து, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் தஞ்சாவூரில் நவம்பர் 23-ம் தேதி, திருவாரூரில் நவம்பர் 24-ம் தேதி காலை 10 மணி அளவில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!