அதிர்ச்சி... 1¼ கிலோ கஞ்சா பறிமுதல்... 4பேர் கைது!

தூத்துக்குடி மாவட்டத்தில் 1¼ கிலோ கஞ்சா வைத்திருந்த 4பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முனியசாமி தலைமையிலான போலீசார் நேற்றிரவு பீச் ரோடு பூங்கா அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 2மோட்டார் பைக்கில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கீதா ஜீவன் நகரை சேர்ந்த ரஞ்சித் மகன் சக்திவேல் (22), 3 சென்ட் அந்தோனியார் புரத்தைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் அருண்குமார் (19), புண்ணியகோடி மகன் பூவை மூர்த்தி என்ற வினோ (21), முத்துகிருஷ்ணாபுரம் மெயின் ரோட்டைச் சேர்ந்த பழனிசாமி மகன் சௌந்தர பாண்டியன் (21), ஆகிய 4பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 200 கிலோ கிராம் கஞ்சா, மற்றும் 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!