ஒவ்வொருத்தராக நம்மை விட்டு பிரிகிறார்கள்... வாழ்க்கை கடினமானது... பாடகி பமீலா மரணம் குறித்து நடிகர் அமிதாப்பச்சன் உருக்கம்!

 
அமிதாப் பச்சன்

‘ஒவ்வொருத்தராக நம்மை விட்டு பிரிகிறார்கள். வாழ்க்கை  மிகவும் எதிர்பாராதது.. கடினமானது. பமீலா சோப்ராவுடன் பகிர்ந்து கொண்ட இசைக் கோர்ப்புகள், திரைப்பட உருவாக்கம் போன்றவை ஞாபகங்களில் நிழலாடுகிறது’ என்று பின்னணி பாடகியும், பிரபல இயக்குநர் யாஷ் சோப்ராவின் மனைவியுமான பமீலா சோப்ராவின் மறைவு குறித்து நடிகர் அமிதாப்பச்சன் ட்விட்டரில் தனது இரங்கலைப் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக பாடகி பமீலாவின் மறைவு செய்து கேட்டு, குடும்பத்தினருடன் நேற்று நேரில் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன், யாஷ் சோப்ராவுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினார். யாஷ் சோப்ராவுக்கு ஆறுதல் கூறிய நான், பமீலாவின் மறைவு குறித்து கண் கலங்குகிறேன். ஏறக்குறைய 15 நாட்கள் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், பமீலாவின் மரணம் எதிர்பாராதது. ஈடு செய்ய  முடியாத பேரிழப்பு என்று பதிவு செய்துள்ளார்.

பமீலா

பின்னணி பாடகியாக மட்டுமல்லாமல், தேர்ந்த எழுத்தாளராகவும், ஆடை வடிவமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்ட பமீலா, அந்த துறைகளில் சாதிக்கவும் செய்திருந்தார். 1970-ல் இயக்குநர் யாஷ் சோப்ராவை திருமணம் செய்து கொண்ட பமீலா, அதன்பின் அவரது படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.

கபி கபி, நூரி, காலா பத்தர், சில்சிலா, சாந்தினி, தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே மற்றும் முஜ்சே தோஸ்தி கரோகே உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். 1976-ல் இயக்குநர் யாஷ் சோப்ரா இயக்கத்தில் வெளியான ‘கபி கபி’ படத்தின் கதையை எழுதினார். அதனைத் தொடர்ந்து, 1997ல் வெளியான ‘தில் தோ பாகல் ஹை’ படத்திற்கு திரைகதையை எழுதியுள்ளார்.

பமீலா

இந்நிலையில், பமீலா சோப்ரா நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 15 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த பமீலா, லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஏஆர்டிஎஸ் (அக்யூட் ரெஸ்பிரேட்டரி டிஸ்ட்ரஸ் சிண்ட்ரோம்) கொண்ட நிமோனியா காரணமாக அவர் நேற்று காலை காலமானார்.  பமீலா சோப்ராவின் மரணத்தை உறுதிப்படுத்தும் அறிக்கையை YRF பகிர்ந்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web