ஒரே நாளில் அடுத்தடுத்து சாலை விபத்து.. 6 பேர் உயிரிழப்பு! திருவண்ணாமலையில் சோகம்!

 
கார் விபத்து

திருவண்ணாமலையில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில், 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வெறையூரில் நேற்றிரவு அரசு பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேராக இருசக்கர வாகனம் மோதியதில் விக்னேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த வாசுகி மற்றும் சாந்தி என இருவரும் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இருவருமே உயிரிழந்தனர்.

Accident

அதே போன்று திருவண்ணாமலையில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் இளையராஜா, காமாட்சி, சஞ்சய், சக்திவேல், செல்வம் ஆகிய 5 பேரும் காரில் சென்று கொண்டிருந்த போது, பெரிய கோளப்பாடி கிராமம் அருகே எதிரே வந்த சரக்கு லாரி இவர்களது காரின் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் இளையராஜா, காமாட்சி, சக்திவேல் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த சஞ்சய் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

TVMalai GH

திருவண்ணாமலையில் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பது திருவண்ணாமலை சுற்றுவட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web