ஒரு லட்சம் பேர் கீதை வாசிப்பு... உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

 
உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் மோடி

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற உடுப்பி கிருஷ்ணன் கோவிலில், இன்று (நவம்பர் 28) மிக பிரம்மாண்டமான முறையில் ஒரு லட்சம் பேர் ஒரே நேரத்தில் பகவத் கீதையைப் பாராயணம் செய்யும் 'லட்ச கீதை பாராயண' நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சியை இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்த ஆன்மிக நிகழ்வில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தடைந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் உடுப்பிக்கு வந்த அவர், பின்னர் சாலை வழியாகக் கார் மூலம் உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார்.

கிருஷ்ணர் கண்ணன்

அவர் வாகனத்தில் வரும் வழியில், சாலையின் இருபுறமும் திரண்டு இருந்த பொதுமக்கள், பூக்களைத் தூவிப் பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். பிரதமரின் வருகை, உடுப்பி நகரையே விழாக்கோலம் காணச் செய்தது.

கோவிலுக்கு வந்த பிரதமருக்குப் பூரண கும்ப மரியாதையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுவாக, உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணரை ஜன்னல் வழியாகவே பக்தர்கள் தரிசிப்பது வழக்கம். பிரதமரும் முதலில் ஜன்னல் வழியாகக் கிருஷ்ணரை தரிசித்தார்.

மோடி

அதன் பிறகு, அவர் தங்கக் கதவைத் திறந்து கோவிலுக்குள் சென்று, மதவ சரோவரில் (தீர்த்தக் குளம்) தீர்த்த அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார். தொடர்ந்து, தங்கத் தீர்த்த மண்டபம் வழியாக வந்த பிரதமர், கிருஷ்ண மடத்தின் சுவாமிகளைச் சந்தித்து, அவர்களிடமிருந்து தீர்த்தப் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு, லட்சக் கணக்கானோர் கலந்துகொண்ட கீதைப் பாராயண நிகழ்ச்சியைப் பிரதமர் மோடி அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். நாட்டின் ஆன்மிக மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் தொடர்ந்து பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி உடனடியாகக் கோவா நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!