ஒரு நாளைக்கு ஒரு லட்சம்!! ஆவினில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை?!

 
ஆவின் குடிநீர்

தமிழகத்தில் பால், பால் பொருட்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் கடந்த சில மாதங்களாக பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், இதனை லாபகரமாக மாற்ற பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் ஆவின் நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. நஷ்டத்தை ஈடுகட்டும் வகையிலும் , தொழிலை விரிவு படுத்தும் வகையிலும் ,  குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

ஆவின்

அதே நேரத்தில் ஒரு நாளைக்கு ஒரு லட்சம்குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தண்ணீர் பாட்டில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி 1 லிட்டர், 500 மில்லி லிட்டர் குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்த குடிநீர் பாட்டில்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் லாரி
ஒப்பந்தப்புள்ளி கோரும் குடிநீர் ஆலைகள்  தமிழக அரசின் அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களுடன், அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின் படி கண்டிப்பாக பராமரிக்கப்பட வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒப்பந்தம் எடுப்பவரிடம் தேவையான அளவிற்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் கையிருப்பு இருக்க வேண்டும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web