கரையான் கூட்டத்தில் இருப்பதை விட எதிரியாவதே மேல்’... நாதகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து நாதக நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியை விட்டு விலகி வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் “நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்ட மாநகர இளைஞர் பாசறை செயலாளர் சபரிநாதன் ஆகிய நான் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகி கொள்கிறோம்.
கரையான் கூட்டத்தோடு இருந்து துரோகி ஆவதைவிட கிளையாக உடைந்து எதிரியாவதே மேல்! இதுவரை ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!