நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவி தற்கொலை!

தமிழகத்தில் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள பெரிய முத்தியம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ், சந்திரா தம்பதியின் மகள் 18 வயது சத்யா. இவர் 12ம் வகுப்பில் 562 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து ஜலகண்டபுரம் பகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் படித்து 2024 ல் நடைபெற்ற நீட் தேர்வில் 333 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தார். இதனால் சத்யாவால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தாலும், அவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் சத்யா தனது பெற்றோரிடம் நீட் தேர்வுக்கு படிப்பதற்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும், மருத்துவ படிப்பில் சேர முடியுமா? முடியாதா? என்ற பயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோரும் படிக்க முடியவில்லை எனில் வேறு ஏதேனும் படிப்பு தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம் என ஆறுதல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து மருத்துவராக வேண்டுமென தன்னுடைய ஆசை நிறைவேறாது என நினைத்து சத்யா மனம் உடைந்து காணப்பட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மாணவி சத்யா மார்ச் 31ம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு எடப்பாடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில் நேற்று மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் உறவினர்கள் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது .
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!