ஒரே நாடு ஒரே தேர்தல்... தமிழக அரசுக்கு மத்திய அரசு 'திடீர்' கடிதம்!
நாடு முழுவதும் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் திட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக மாநிலங்களின் கருத்துகளைக் கேட்கும் பணியில் தற்போது இறங்கியுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, இத்திட்டம் குறித்து விரிவாக ஆராய்ந்து தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்தக் குழுவின் பரிந்துரையின்படி தயாரிக்கப்பட்ட வரைவு மசோதா, தற்போது நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள இந்தக் கடிதம் குறித்துத் தமிழக அரசின் பொதுத் தேர்தல்கள் துறை மற்றும் சட்டத் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழக அரசு தனது எதிர்ப்பை மீண்டும் இக்கடிதம் மூலம் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நேரடியாக தொகுதி மறுவரையறை உடன் தொடர்புடையது. புதிய தகவல்களின்படி, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் மார்ச் 2027-ல் தொடங்க வாய்ப்புள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு, மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்படும். அதன் பிறகே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் செயல்படுத்த முடியும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இத்திட்டத்தைச் செயல்படுத்த பல அரசியல் சாசன சட்டப் பிரிவுகளில் (எ.கா. சட்டப்பிரிவு 83, 172) திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் முன்கூட்டியே கலைக்கப்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது எனப் பல மாநிலங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த இன்னும் லட்சக்கணக்கான கூடுதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கூடுதல் நிதி தேவைப்படும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
