சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி... உஷார் மக்களே... !

 
கொரோனா

சீனாவின் வூகாண் மாகாணத்தில் 2019ம் ஆண்டு இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். படிப்படியாக தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் தற்போது கொரோனா திரிபான ஜேஎன் என் வகை வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

கொரோனா

இந்தியாவின் பல பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில்  மீண்டும் மாஸ்க், சமூக இடைவெளி இவைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் விமான நிலையங்களில் ஆர்டிபிசிஆர் சோதனையும் கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்லது. தமிழகத்தை பொறுத்தவரை பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இணை நோய் இருப்பவர்கள், முதியவர்கள் , குழந்தைகள்  பொது இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. எல்லை பகுதிகளில் ஆர்டிபிசிஆர் சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையம்

அந்த வகையில் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 29 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஏற்கனவே  178 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில்  சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.   
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த  42 வயதாகும் இவர் டிசம்பர் 31ம் தேதி   சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web