பெரும் சோகம்.. மெட்ரோ கட்டுமானப் பணியில் இரும்புத்தூண் சரிந்து விழுந்து ஒருவர் பலி!

சென்னையின் பல பகுதிகளில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மவுண்ட் – பூந்தமல்லி சாலையில் நேற்று இரவு மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது ராட்சத ‘கர்டர்’ சரிந்து விழுந்தது. இதில் சுமார் 35 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போரூர் – நந்தம்பாக்கம் ரயில்வே பாலத்தின் கீழ் வாகனப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. ராட்சத கிரேன் மூலம் கர்டர்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்து குறித்து மெட்ரோ நிர்வாகம் மணப்பாக்கத்தில் எல் & டி நிறுவனம் அருகே ஒரு வாரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட இரண்டு “I” வடிவ இரும்புதூண்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சரிந்து விழுந்து விட்டன.
அவற்றை தாங்கி இருந்த A-frame ஒரு கட்டமைப்பு கீழே விழுந்ததால் விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மற்றும் அதன் ஒப்பந்ததாரர்கள் போர்க்கால அடிப்படையில் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பதை அறிய விரைவில் விசாரணை நடத்தப்படும். விபத்தில் ஒருவர் உயிரிழந்ததை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!