ஏர் இந்தியா விமான விபத்தில் ஒருவர் உயிரோடு மீட்பு!

 
விமான விபத்து

 

 

குஜராத் மாநிலத்தில் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் மோதி வெடித்து விபத்து ஏற்பட்டது. இன்று பிற்பகல் ஏற்பட்ட விமான விபத்தில் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருப்பதாக, ஆமதாபாத் காவல் ஆணையர் மாலிக் தெரிவித்துள்ளார்.

கோர விமான விபத்து... மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  குஜராத் விரைகிறார்!  

 

ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த 242 பேரும் பலியாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஏர் இந்தியா விமானத்தின் 11ஏ இருக்கையில் அமர்ந்திருந்த விஸ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் உயிர் பிழைத்திருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், விமானம் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து கருகிய நிலையில் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

விமான விபத்து

இந்த விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உட்பட மொத்தம் 242 பேர் பயணம் செய்ததாக ஏர் இந்தியா தெரிவித்திருந்தது. ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் 169 பேர் இந்தியர்கள் என்றும், 53 பேர் பிரிட்டீஷ் நாட்டவர் என்றும், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர், ஏழு பேர் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் உயிர் பிழைத்த பிஸ்வாஸ், லண்டனில் வாழ்ந்து வருகிறார். இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்துவிட்டு, லண்டன் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பிஸ்வாஸ் குமார், பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்பதும், அவரது குடும்பத்தினர் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பிஸ்வாஸ் குமார் கண் மற்றும் மார்பு, கால்களில் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது