கல்லூரி மாணவ, மாணவிகள் 'காதலில் விழ' ஒரு வாரம் விடுமுறை.. சீனா அரசின் வசந்தகால பரிசு !!

 
சீனா

சர்வதேச அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் சீனா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, கிட்டதட்ட சீனாவை நெருங்கிவிட்டதாக கருதப்படுகிறது. இந்த நிநலையில், நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்க சீன அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்து வருகிறது. 

அதாவது, குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகளவில் கொண்ட நாடாக சீனா விளங்கி வந்த நிலையில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த 1980ஆம் ஆண்டுகளில் கறாரான சட்டங்களை சீன அரசு கொண்டுவந்தது. குறிப்பாக ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்ளக் கூடாது என சட்டம் இயற்றியதால் தற்போது அந்நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

சீனா

இதனால், சீன மக்கள் மீண்டும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஏதுவாக சட்ட திட்டங்களை சீனா அரசு 2015க்குப்பின் கொண்டுவரத் தொடங்கியது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட யோசனைகளை சீனா அரசுக்கு நிபுணர்கள் வழங்கியுள்ளனர். 

இந்நிலையில், கல்லூரி படிக்கும் இளம் தலைமுறையினரை குறிவைத்து அவர்களை குஷிப்படுத்தும்  வகையில் புதிய முன்னெடுப்பை சீனா அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி, அந்நாட்டின் 9 முன்னணி கல்லூரிகள் ஒரு வார காலம் மாணவர்களுக்கு "fall in love" விடுமுறையை வழங்கியுள்ளனர். அதாவது, 'காதலில் விழ' என்ற வகையில் ஒரு வாரம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

சீனா

சீனாவில் தற்போது வசந்த காலம் தொடங்கியுள்ள நிலையில், மாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை பயன்படுத்தி, இயற்கை, காதல் வாழ்க்கை ஆகியவற்றை நன்கு அறிந்து அனுபவிக்கலாம் என்ற  க்கில் இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பிறப்புவிகித்தை உயர்த்தும் விதமாகவே புதுமண தம்பதிக்கு ஒரு மாதம் சம்பளத்துடன் விடுப்பு வழங்கும் திட்டத்தை சீனாவின் பல்வேறு மாகாணங்கள் அமல்படுத்தியுள்ளது.  

 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web