8000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 உடன் - ஒன் பிளஸ் 15R இந்தியாவில் அறிமுகம்!
இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15R அடுத்த மாதம் டிசம்பர் 17, 2025 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த அம்சங்களுடன் வருவதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தச் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. நீண்ட நேரம் நீடித்து உழைக்கும் வகையில், 8000mAh பேட்டரி இதில் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 16-ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்சிஜன் ஓஎஸ் 16 (Oxygen OS 16) இதில் இருக்கும்.

இதன் இந்திய மாடலில் 50MP + 50MP இரட்டை பின்புற கேமராக்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்தச் ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP66, IP68, IP69 மற்றும் IP69K மதிப்பீடுகளுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கிரீன் லைன் (பச்சை கோடு) பிரச்சினை ஏற்படாது என்று ஒன்பிளஸ் வாழ்நாள் முழுக்க உத்தரவாதம் அளித்துள்ளது.

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சார்கோல் பிளாக் மற்றும் மிண்ட் பிரீஸ் ஆகிய வண்ணங்களில் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தச் சாதனம் அமேசான் வலைதளம், ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோர் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும். இந்தச் ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் விவரங்கள் அடுத்த வாரங்களில் வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
