மல்லாங்கிணறு அரசு சுகாதார நல நிலைய கட்டிடங்கள் ONGC - CSR ஆதரவுடன் புதுப்பித்து திறப்பு... உடனடியாக பொது பயன்பாட்டுக்கு வந்தன!

 
மல்லாங்கிணறு

 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு  அரசு சுகாதார நல நிலையம், மல்லாங்கிணறு  மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள, முக்கியமாக விவசாயம் சார்ந்த சுமார் 20,000 மக்களுக்கு சேவை செய்கிறது.

மல்லாங்கிணறு

 

மல்லாங்கிணறு

மல்லாங்கிணறு  அரசு சுகாதார நல நிலையத்தின் OP வார்டு கட்டிடம் மற்றும் பிரசவ  வார்டு கட்டிடங்கள் சேதமடைந்த நிலையில் இருந்தன. 2024 நவம்பர் மழையின்போது, மொட்டை மாடி மற்றும் சுவர்களில் கடுமையான நீர் கசிவும் சேதங்களும் ஏற்பட்டிருந்தன. அவை உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டிய நிலை இருந்தது.

மல்லாங்கிணறு

மல்லாங்கிணறு

ONGC நிறுவனம் தனது CSR நன்கொடை மூலம் உதவியதால் இந்த இரண்டு கட்டிடங்களும் தற்போது புதுப்பிக்கப் பட்டுள்ளன. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மரு. சுகபுத்ரா IAS அவர்களின் ஆதரவுடனும், ONGC நிதி உதவியுடனும், அன்பாலயா அறக்கட்டளை இந்த புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டது. புதுப்பிக்கப்பட்ட இரண்டு கட்டிடங்களும்  2026  ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி திறந்துவைக்கப் பட்டன.

மல்லாங்கிணற்றின் புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள் பிப்ரவரி 20, 2026 அன்று முறையாகத் திறக்கப்பட்டன.

மல்லாங்கிணறு

மல்லாங்கிணறு

மல்லாங்கிணறு

ONGC இன் மேற்பார்வை பொறியாளர் திரு. சந்தோஷ் குமார்,
ONGC இன் தலைமை மேலாளர் (HR) திரு. ரஞ்சித் விராலி முருகேசன்
ஆகியோர் புதுப்பிக்கப்பட்ட  2 கட்டிடங்களையும் திறந்து வைத்தனர். 

மல்லாங்கிணறு பிளாக் மருத்துவ அதிகாரி திரு. T. ராஜேஷ் கண்ணன் MBBS தொடக்க நிகழ்விற்கு தலைமை தாங்கினார்.அன்பாலயா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திருமதி. சர்மிளா மற்றும் அறங்காவலர் திரு. திருஞானம் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.புதுப்பிக்கப்பட்ட கட்டிடங்கள், திறப்பு விழா நாளிலிருந்தே பொது பயன்பாட்டிற்கு வந்தன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!