வெங்காய லாரியில் வெடிமருந்துகள்… அதிர்ச்சி சோதனை!

 
வெங்காய லாரி
 

கேரள மாநிலத்தில் போலீசார் நடத்திய திடீர் வாகன சோதனையில் வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து பெருமளவு வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்டம் செம்மண்ட் பகுதியில் இரவு நேரத்தில் போலீசார் சந்தேகத்தின் பேரில் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். வழக்கமான சரக்காக இருந்த வெங்காய மூட்டைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

வாகன ஓட்டிகளே அலெர்ட்... எந்தெந்த வகையான விதிமீறலுக்கு  அபராதம்... சென்னை காவல் ஆணையர் அதிரடி  உத்தரவு!

போலீசார் வெங்காய மூட்டைகளை இறக்கி பரிசோதனை செய்தபோது, அவற்றின் நடுவே பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. சோதனையில் சுமார் 10 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள், டெடனேட்டர்கள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வெடிமருந்துகளை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்துள்ளனர். ஆரம்ப விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்துகள் சட்டவிரோத சுரங்கப் பணிகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!