ஆன்லைன் டெலிவரியில் கிச்சடியில் ஈ... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
ஸ்விக்கி


இன்றைய அவசர யுகத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது தினசரி வழக்கமாகிவிட்டது. ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து அதில் அதில் ஏதாவது தவறு இருப்பின், அதன் பொறுப்பு யாருக்குச் செல்லும் என்பது குறித்த வழக்கு 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.  மத்தியப் பிரதேசத்தின் போபால் நுகர்வோர் மன்றம்,தொடர்ந்து 2  ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் தீர்ப்பு வழங்கி, உணவுப் பாதுகாப்பு குறித்து சிந்திக்க வைத்துள்ளது.

கிச்சடி

மத்திய பிரதேச மாநிலத்தில் கௌதம் நகரில் வசித்து வரும் அபிஷேக் தீட்சித்  மே 25 , 2024 அன்று ஸ்விக்கி மூலம் வெண்ணெய் கிச்சடியை ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அந்த உணவில்  ஒரு இறந்த ஈயைக் கண்டதையடுத்து நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.

சிறுமி வன்கொடுமை வழக்கில் ஒரேநாளில் நீதிமன்றம் தீர்ப்பு..!!

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, உணவில் செத்த ஈ கிடந்தது. இது ஹோட்டலின் அலட்சியத்தால் ஏற்பட்டது.  உணவை வழங்கிய ஸ்விக்கி ஒரு ஊடகம் மட்டுமே என்பதால் அதன் மீது பொறுப்பு இல்லை என்றும் நீதிமன்றம் தீர்மானித்தது. வழக்கின் விசாரணை தொடர்ந்து 2 ஆண்டுகள் நீடித்த நிலையில்  இந்த விவகாரத்தில் உணவகம் மீது தவறு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இது குறித்து வழங்கப்பட்ட தீர்ப்பில்   போபால் நுகர்வோர் மன்றத் தலைவர் யோகேஷ் தத் சுக்லா மற்றும் உறுப்பினர் டாக்டர் பிரதிபா பாண்டே ஆகியோர், உணவக மேலாண்மை தரமற்ற முறையில் செயல்பட்டதாகக் கூறி, ரூ.15,130 இழப்பீட்டை அபிஷேக் தீட்சித்திற்கு வழங்க உத்தரவு பிறப்பித்தார். இது போன்ற தீர்ப்புகள் எதிர்காலத்தில் உணவகங்கள் தரத்தை பராமரிக்க கட்டாயப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?