ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு... கல்லூரி மாணவர் தற்கொலை!

 
online

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் சவுடய்யா நகரைச் சேர்ந்த ரமேஷ் (21), ஜமகண்டி உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். ரமேஷ் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, பல லட்சம் ரூபாய் இழந்திருந்தார். இதற்காக அவர் சில நபர்களிடமிருந்து கடனும் வாங்கியிருந்தார்.

இதுபற்றி ரமேஷின் தந்தைக்கு தெரியவந்தபோது, கடன் தொகையை இரண்டு முறையாக தந்தை அடைத்திருந்தார். இருந்தாலும், ரமேஷ் ஆன்லைன் சூதாட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ரமேஷ் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

ஆம்புலன்ஸ்

வெளியே சென்றிருந்த பெற்றோர் வீட்டிற்கு திரும்பிய போது அவர் தூக்கில் தொங்குவதை கண்டதும் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.இதுகுறித்து ஜமகண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!