ஆன்லைன் ரம்மியில் ரூ10 லட்சம் இழப்பு... ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனாலும், எந்த மாநில அரசும் ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய முன்னெடுப்பதில்லை. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்த இளைஞர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைச் செய்துக் கொண்டார்.
திருச்சி, தொட்டியம் தாலுகா, பிடாரமங்கலம் அடுத்த தேவர்மலையைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் திருப்பூர் மாவட்டம், முத்தூரில் உள்ள தனியார் வங்கி கிளையில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி 22 வயது கவிதா. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். ஆன்லைனில் ரம்மி விளையாடிய ஜெயக்குமார், அதில், 10 லட்சம் ரூபாய் வரை இழந்துள்ளதாக தெரிகிறது. தனது மனைவியிடம், இரண்டு லட்சம் ரூபாய் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த நெய்க்காரன்பட்டி அருகே கோவில்பட்டி அவரது தந்தை பிறந்த ஊர். இங்கு வந்த அவர் , ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். அங்கிருந்த முதியவர், தடுத்து அறிவுரை கூறி வீட்டுக்கு அனுப்பி் வைத்துள்ளார்.இந்நிலையில் நேற்று ஏப்ரல் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு, தனது ஹோண்டா பேஷன் பிரோ பைக்கில் நெய்க்காரப்பட்டி பாண்டியன் நகர் ரயில்வே டிராக்கிற்கு ஜெயக்குமார் வந்துள்ளார்.
அங்கு, தனது பைக்கை நிறுத்திவிட்டு, ரயிலுக்காக காத்திருந்தார். மாலை 3 மணிக்கு, சேலம் – மயிலாடுதுறை சென்ற ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் இரண்டாக துண்டாக பிளந்தது. இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த தனியார் வங்கி துணை மேலாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!