‘நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை’ என எதுவும் இல்லை… மருத்துவர்கள் எச்சரிக்கை!

 
ஆன்லைன்
 

 

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்தால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இதனை அதிகரிப்பதாக கூறி சந்தையில் மாத்திரைகள், டானிக்குகள், மூலிகைப் பொடிகள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வைட்டமின் சி, டி, துத்தநாகம் இருப்பதாக விளம்பரம் செய்து, ஆன்லைன் மூலமாகவும் இவை அதிகம் விற்பனையாகின்றன. சமூக வலைதளங்களில் பிரபலங்கள் விளம்பரப்படுத்துவதால் பலர் நம்பி வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இவ்வகை நோயெதிர்ப்பு சக்தி உயர்த்தும் பொருட்களில் பெரும்பாலானவை நம்பகமற்றவை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நோய் எதிர்ப்பு அமைப்பு என்பது உடலில் சமநிலையில் இயங்கும் சிக்கலான அமைப்பு ஆகும். அதை திடீரென தூண்டுவது ஆட்டோ இம்யூன் நோய்கள், அழற்சி, தைராய்டு, சருமப் பிரச்சினை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்படுகிறது.

கொச்சி கேர் மருத்துவமனை வாதநோய் நிபுணர் டாக்டர் பத்மநாப ஷெனாய், “நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரே மாத்திரை எதுவும் இல்லை. சந்தையில் கூறப்படும் 99 சதவீத விளம்பரங்கள் போலியானவை” என தெரிவித்துள்ளார். சரியான உணவுமுறை, பழங்கள், காய்கறிகள், உடற்பயிற்சி, நல்ல தூக்கம், மனஅழுத்தக் கட்டுப்பாடு ஆகியவையே நோயெதிர்ப்பு சக்தியை இயற்கையாக வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!