பொதுமக்களே உஷார்... காதல் வலை மோசடி குறித்து காவல்துறை எச்சரிக்கை!

 
ஆன்லைன் மோசடி ஆன்லைன் மோசடி

தமிழ்நாடு காவல்துறை பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களுடன் பழகும் போது காதல் வலை மோசடிகளில் சிக்காமல் இருக்க விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய மோசடிகள் சமீப காலமாக அதிகரித்து வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மோசடி

அந்நியர்களுடன் அதிகமாக தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக அந்தரங்க புகைப்படங்கள் அல்லது காணொலி அழைப்புகள் மூலம் பேசுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இத்தகைய செயல்கள் பின்னர் மிரட்டல் மற்றும் பண மோசடிக்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மோசடிகளில் யாரேனும் பாதிக்கப்பட்டால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இணைய குற்ற அவசர உதவி எண் 1930 ஐ தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது. விழிப்புணர்வுடன் செயல்பட்டால் இத்தகைய மோசடிகளை தவிர்க்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!