மெரினாவில் 300 கடைகள் மட்டுமே… குலுக்கல் முறையில் அனுமதி!
சென்னை மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினாவில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது. முன்னதாக நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்து, நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளில் எந்த கடைகளும் அமைக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தனர்.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி தரப்பில் கடை ஒதுக்கீடு தொடர்பான திட்ட வரைபடம் தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஆய்வு செய்த நீதிபதிகள், கடைகளின் எண்ணிக்கை 1417-ல் இருந்து 1006 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து, உணவு, பொம்மை மற்றும் பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் மட்டுமே அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

கடைகள் ஒதுக்கீடு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு மூலம் குலுக்கல் முறையில் நடக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தியாவிலேயே மெரினாவில் தான் அதிக கடைகள் உள்ளன என்றும், கடற்கரையை வணிக வளாகமாக மாற்றக் கூடாது என்றும் அவர்கள் எச்சரித்தனர். மெரினாவின் பெருமையை மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், நீலக்கொடி சான்று பெற்றதற்காக பாராட்டியும் தெரிவித்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
