1000 கிலோ மீன்கள்.. அமைச்சர்களுக்கு விருந்து வைத்த பாமக எம்.எல்.ஏ.!

 
மேட்டூர்

சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின்  சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சதாசிவம். மேட்டூர் அணையில் கெண்டை மீன்கள் அதிக அளவில் கிடைக்கும். அந்த மீன்களுக்கு என்று தனி மவுசு உள்ளது. தூய்மையான காவிரி நீரில் வளரும் மீன்கள் என்பதால் கட்லா, ரோகு, மிர்கால் என அனைத்து வகை மீன்களும் சுவையில் தனி ரகம் கொண்டவை. 

இந்த நிலையில், தற்போது சட்டமன்றக் கூட்டம்  நடந்து வருவதால், எம்.எல்.ஏ சதாசிவம் தனது தொகுதியில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து கிடைக்கும் மீன்களை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு விருந்து படைத்து அசத்தியுள்ளார். 

மேட்டூர்

இதற்காக எம்.எல்.ஏ சதாசிவம் மேட்டூர் அணையிலிருந்து ஒரு டன் மீன்களை பிடித்து தனி வாகனத்தில் சென்னைக்கு கொண்டுவந்துள்ளார். காவேரி ஆற்று நீரில் பயரிட்டு விளையும் புழுங்கல் அரிசியையும் எடுத்து வந்தார். அதுமட்டுமின்றி மீன் உணவு சமைப்பதில் கைதேர்ந்த சமையல் கலைஞரியும் சேலத்தில் இருந்து கையோடு அழைத்து வந்தார். 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சமூகநலக் கூடத்தில் அரிசி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், மீன் ரசம், முட்டை ஆகிய ஐட்டங்களுடன் விருந்து தயாரிக்கப்பட்டது. அவை மிக நேர்த்தியான பாக்ஸ்களில் பார்சல் செய்யப்பட்டு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அவர்களின் உதவியாளர்கள் உள்ளிட்ட 500 நபர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே அனுப்பி வைத்தார் சதாசிவம். மீன் உணவை ரசித்தும் ருசித்தும் சாப்பிட்டவர்கள், மேட்டூர் அணையின் மீன்களுக்கு தனி ருசிதான் என்று சதாசிவத்தை பாராட்டியுள்ளனர். 

மேட்டூர்

இந்த உணவு தயாரிப்பதற்கு 5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின்  சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் அளித்த விருந்துதான் இப்போது ஹாட் டாபிக்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web