2028 ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகளுக்கு மட்டுமே அனுமதி!

2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்ஸ்க்கு 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களுக்கு 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது என மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
ஐசிசியில் முழுநேர உறுப்பினராக 12 அணிகள் இருக்கும் நிலையில் இதில் வெறுமனே 6 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள் பிரிவில் 6 அணிகள் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. டி20 வடிவில் நடைபெறும் இதில் ஒவ்வொரு அணியிலும் 15 பேர் தேர்வுசெய்யப்பட்டு மொத்தமாக 90 பேர்கள் ஒலிம்பிக்ஸ்க்கு தேர்வாக இருக்கிறார்கள். ஒலிம்பிக்ஸை நடத்தும் அமெரிக்க அணி தானாகவே தேர்வானதால் மீதமுள்ள 5 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
இந்த அணிகள் தேர்வு முறைகள் குறித்து தற்போது எந்தத் தகவலும் தெரிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,900ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் நடைபெற்றது. 2 நாட்கள் போட்டியாக இது நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!