என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் சீட் ... ராமதாஸ் அதிரடி!

 
ராமதாஸ்


 
 பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது மகன்  அன்புமணி இடையே   மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10ம் தேதி  ராமதாஸ், தான் மீண்டும் கட்சியின் தலைவர் என்றும், அன்புமணியை செயல் தலைவராக நியமிப்பதாகவும் அறிவித்தார்.  மாமல்லபுரத்தில் மே 11 அன்று நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் ராமதாஸ், அன்புமணியை மறைமுகமாக விமர்சித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்
 ஜூன் 13 ம் தேதி  ராமதாஸ், “என் மூச்சுக்காற்று இருக்கும் வரை அன்புமணிக்கு தலைவர் பதவி தரமாட்டேன்,” எனக் கூறி, அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சிக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். “அன்புமணியை 35 வயதில் மத்திய  அமைச்சராக்கியது எனது தவறு,” எனக் கூறினார்.  பாமக ஆதரவாளர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர்.

ராமதாஸ்
பாமக  நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ஜூன் 25,ம் தேதி தைலாபுரத்தில்   2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து  “என்னுடன் இருப்பவர்களுக்கு மட்டுமே தேர்தலில் சீட் வழங்கப்படும்,” எனக் கூறியுள்ளார்.    மேலும்  ராமதாஸ்  “எம்.எல்.ஏ அருள் எனக்கு துணையாக, என்னோடு தான் பயணிக்கிறார். இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கக் கூடிய மாநில தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள்தான் தேர்தலில் நிற்கப் போகிறார்கள். இவர்களைத்தான் நான் தேர்ந்தெடுப்பேன். இவர்கள்தான் வருங்கால சட்டமன்ற உறுப்பினர்கள்,”  .  “கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்று, நல்லவர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக ஆக்குவேன்,” எனக் கூறினார்.   நாங்கள் அமைக்கப் போகும் கூட்டணி  வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக அமையும்,” எனவும் கூறியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது