பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி... தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழா!

 
விஜய்

தமிழக வெற்றி கழகம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில்  முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதற்காக மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள், வியூக வகுப்பாளர்களை நியமித்து வருகிறார். இதன் காரணமாக பனையூரில் உள்ள அக்கட்சியின் அலுவலகம் பரபரப்புடன் காணப்படுகிறது.

விஜய் தவெக மாநாடு 

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் 70000 பூத் கமிட்டி செயலாளர்களை நியமனம் செய்ய அக்கட்சி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே  அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தவெக முதலாம் ஆண்டு விழா இன்னும் சிறிது நாட்களில் நடைபெற இருக்கும்  நிலையில், இந்நிகழ்ச்சியில் பாஸ் உள்ளவர்களுக்கு  மட்டுமே அரங்கினுள் அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web