அச்சச்சோ!! இன்று முதல் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்!!

 
மாஸ்க்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் தேவையான தடுப்பு முறைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய , மாநில அரசுகள் மேற்கொண்டு வந்தன. இருந்த போதிலும் இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றன.

மாஸ்க்

அந்த வகையில் கேரளாவிலும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து  திருச்சூரில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கேரளாவில் 210 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதால் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ராம்ராஜ் முத்திரையை தவறாக பயன்படுத்திய போலி மாஸ்க் தயாரிப்பு நிறுவனர் அதிரடி கைது!
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஐசியூ மற்றும் வென்டிலேட்டர் அமைப்புகளை உடனடியாக தயார் நிலையில் வைத்திருக்க சுகாதாரத்துறை அமைச்சர்  வீணா ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் கொரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் எனவும், சமூக இடைவெளி, முகக்கவசம் , அடிக்கடி கைகளை கழுவுதல் இவைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.  இது குறித்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று  நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்திலும்  அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web