அச்சச்சோ... சென்னையை நோக்கி நகரும் ‘டிட்வா' புயல்... 90 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று.. அதி கனமழை எச்சரிக்கை!

 
டித்வா புயல்

தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த 'டிட்வா' புயல் தற்போது இலங்கைப் பரப்பிலிருந்து முழுமையாக விலகி, டெல்டா மற்றும் வட இலங்கை கடல் பகுதிகளை இன்று (நவம்பர் 29, சனிக்கிழமை) காலை அடைந்துள்ளது. புயலின் நகர்வு மற்றும் தீவிரமடையும் நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்களில் இன்று பிற்பகல் முதல் நாளை வரை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நேற்று மாலை நிலவரப்படி, ‘டிட்வா’ புயல் காரைக்காலில் இருந்து தெற்கு-தென் கிழக்கே 320 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 430 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 530 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது. தற்போது புயல் காற்றின் சுழற்சி வேகம் மணிக்கு சுமார் 65 கி.மீ. என்ற அளவில் உள்ளது.

புயல்

வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் அவர்களின் கூற்றுப்படி, புயலானது இலங்கைப் பரப்பிலிருந்து விலகி, டெல்டாவை அடையும்போது காற்றின் மைய வேகம் 70 கி.மீ. முதல் 80 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் புயல் தன்னுடைய சக்தியைப் புதுப்பித்துக்கொண்டு பயணிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டெல்டா கடற்கரையை நெருங்கும்போது, புயல் மிகவும் மெதுவாக நகரவோ அல்லது சில மணி நேரம் நிற்கவோ வாய்ப்பு அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில், புயலின் மேற்குப் பகுதி, அதாவது அதன் முன்பகுதி, காவிரி டெல்டா பகுதிகளில் கரையைத் தொடலாம். ஆனால் அது முழுமையாகக் கரையை கடக்காது எனவும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

டெல்டா நிலப்பரப்பில் சில மணி நேரம் ஊடுருவிய பின்னர், புயல் தொடர்ந்து வடக்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று பிற்பகலுக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை வந்தடையும். அவ்வாறு வரும்போது, சென்னை கடலோரப் பகுதிகளுக்கு அருகில் புயல் சற்று நிற்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் நகர்வைப் பொறுத்தே, அது எங்கே கரையை கடக்கும் என்பதைத் துல்லியமாக அறிய முடியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம் ஆட்டோ கனமழை மழை

புயலின் தாக்கத்தால் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் இன்று முதல் திங்கட்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, டெல்டா பகுதியில் இன்று குறுகிய நேரத்தில் தீவிர கனமழை கொட்டித் தீர்க்க வாய்ப்புள்ளது. அதி கனமழை (சிவப்பு எச்சரிக்கை): மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி.

கன முதல் மிக கனமழை: புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகள்.

திருவள்ளூர், ராணிப்பேட்டையில் அதி கனமழையும், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், செங்கல்பட்டு மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

புயல் காரணமாக இன்றும் நாளையும் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 70 கி.மீ. முதல் 90 கி.மீ. வரை வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!