உதகை மலை ரயில் புதிய டீசல் இஞ்சின் மூலம் இயக்கம்!

 
மலை


நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து உதகைக்கு மலை ரயில் புதிய டீசல் இஞ்சின் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் நூற்றாண்டுகள் கடந்தும் ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரயிலில் பழமை மாறாமல் தற்போதும் இயங்கி வருகிறது.

ஊட்டி மலை ரயில் சேவை ரத்து!! ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்!!

இந்த மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள  வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல், உள்நாட்டு  சுற்றுலா பயணிகளும் முன்பதிவு செய்து காத்திருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் இருந்து 30க்கும் மேற்பட்டோர் ரயில் பயணம் மேற்கொள்ள குன்னூர் வந்திருந்தனர். ஆனால் குன்னூரில் இருந்து உதகைக்கு சாதாரண டீசல் இஞ்சின் இயக்கப்பட்டு வந்த நிலையில் முதல் முறையாக டீசலில் இயங்கும் புதிய எக்ஸ் கிளாஸ் நீராவி இஞ்சின் மேட்டுப்பாளையத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு பழைய காலத்தில் இயக்கப்பட்டது போன்று இயக்கப்பட்டது.

மலை ரயில்

இனி வர இருக்க கூடிய கோடை சீசனுக்கு இதே இஞ்சினை வைத்து மலை ரயில் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?