கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஓபெக் நாடுகள்... எகிறியது எண்ணெய் விலை.. மேலும் உயர வாய்ப்பு!

 
எண்ணெய் கப்பல் துறைமுகம்

சர்வதேச முன்னணி எண்ணை உற்பத்தி கூட்டமைப்பான 'ஓபெக்' தினமும் சராசரியாக 3 கோடி பேரல் அளவுக்கு கச்சா எண்ணையை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. ஆனால், சந்தைப்படுத்தும் நோக்கில், உலக அளவில் தொய்வு நிலவுவதால், ஓபெக் கூட்டமைப்பு தடுமாறிக் கொண்டிருந்தது. கடந்த மார்ச் 17ம் தேதி சர்வதேச கச்சா எண்ணை சந்தையில் பிரென்ட்ரக கச்சா எண்ணை, ஒரு பேரல் 72.77 டாலர்களாகவும். வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணை விலை ஒரு பேரல் 67 டாலர்களாகவும் வீழ்ச்சியடைந்தது. கச்சா எண்ணை சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சியால், ஓபெக் கூட்டமைப்பு பீதியடைந்தது.

ஓபெக் கச்சா எண்ணெய் க்ரூட் ஆயில்

இதையடுத்து எண்ணை விலையை நிலைப்படுத்தும் நோக்கில், தினசரி உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணையின் அளவை குறைக்கவுள்ளதாக மார்ச் இறுதியில் ஒபெக் கூட்டமைப்பு அறிவித்தது. சந்தைக்கு விற்பனையைவிட, வரத்து குறையத் தொடங்கும் என்பதால், கச்சா எண்ணை விலை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. நேற்று காலை நிலவரப்படி, சிங்கப்பூர் கச்சா எண்ணை சந்தையில் ஒரு பேரல் வெஸ்ட் டெக்சாஸ் கச்சா எண்ணை 81 டாலர்களுக்கும், பிரென்ட் ரக கச்சா எண்ணை ஒரு பேரல் 85 டாலர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வால், ஓபெக் நாடுகள் நிம்மதி அடைந்துள்ளன. அதேபோல், ஒபெக் கூட்டமைப்பு நாடுகள் தங்கள் பங்குக்கு கச்சா எண்ணை உற்பத்தியைக் குறைக்கத் தொடங்கியுள்ளன.

ஓபெக் கச்சா எண்ணெய்

தினமும் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணையில் 20 லட் சம் பேரல் அளவுக்கு குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மொத்த உற்பத்தியில் ஈராக் தினமும் 2 லட்சத்து 11 ஆயிரம் பேரல் கச்சா எண்ணையும், யுஏஇ ஒரு லட்சத்து 44 ஆயிரம் பேரல் கச்சா எண்ணையும், குவைத் ஒரு லட்சத்து 28 ஆயிரம் பேரல், அல்ஜீரியா 48 ஆயிரம் பேரல் மற்றும் ஓமன் 40 ஆயிரம் பேரல் கச்சா எண்ணையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன. ஆகவே மீண்டும் விலைவாசி உயரும் என்ற அச்சமும் பீதியும் ஏற்பட்டுள்ளது ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட 300 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது என்பது ஆறுதல் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web