240000 சதுர அடியில் கலைஞர் நூலகம்!! ஜூலை 15ல் திறப்பு!!

 
கலைஞர் நினைவு நூலகம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாக   அண்ணா நூற்றாண்டு நூலகம் உருவாக்கப்பட்டது. அந்த வகையில் மதுரையிலும் அமைக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு மதுரை மாவட்டம் புதுநத்தம் சாலையில்  ரூ.99 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.  பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள இந்நூலகம் கன்னியாகுமரியில் தொடங்கி தென் மாவட்டங்கள் முழுவதில் இருந்தும்  மாணவர்கள், பல்துறை வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

கலைஞர் நினைவு நூலகம்


8 தளங்களில்  நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள  கலைஞர் நினைவு நூலகத்தில்,  அடித்தளத்தில் வாகன நிறுத்தம்,  தரை தளத்தில் வரவேற்பு அரங்கம், தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவை அமைக்கப்பட்டுளன.   முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை இரண்டு லட்சத்திற்கும் மேலான பல்வேறு நூல்களுக்கான பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன.  

கலைஞர் நினைவு நூலகம்

கட்டுமான பணிகளுக்கு ரூ. 99 கோடியும்,  புத்தகங்கள் வாங்க  ரூ. 10 கோடியும்,  கணினிகள்  வாங்க ரூ.  5 கோடியும் என மொத்தம் ரூ. 114 கோடி மொத்தமாக செலவிடப்பட்டுள்ளது.   மதுரையில் கட்டப்பட்ட கலைஞர் நூலகத்தை ஜூலை 15ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நூலகத்தில் வைக்க சுமார் 10 கோடி மதிப்பில் லட்சக்கணக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web