பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!
இன்று (மார்ச் 13) இந்திய நாடாளுமன்ற வளாகம் பகுதியில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி சமையல் எரிவாயு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர். இந்த போராட்டம் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பல இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இதனை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். பொதுமக்கள் சந்திக்கும் சிரமத்தை அரசாங்கம் கவனிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போராட்டத்தில் எம்.பி.க்கள் கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் படங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். எரிவாயு விநியோகத்தை சீராக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
