எதிர்க்கட்சிகள் அமளி… மக்களவை மீண்டும் முடக்கம்!
வாரத்தின் முதல் நாளான இன்று எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் உரை விவாதத்தில் எல்லை பிரச்சினை குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதே காரணத்தால் கடந்த வாரம் முழுவதும் மக்களவை நடவடிக்கைகள் முடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை கூட்டம் தொடங்கியவுடன் யு-19 உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு அவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அவை நடவடிக்கைகள் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கடந்த வாரம் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டிருந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
