வைரல் வீடியோ!! நாடாளுமன்றத்தில் காதலை சொன்ன எம்.பி.!!

 
நோவா எர்லிச்

நாடாளுமன்றம் என்றாலே ஆளும் கட்சிகள் மீது பரபரக்கும் குற்றச்சாட்டுகள், மக்கள் பிரச்சனைகளை அரசின் கவனத்துக்கு கொண்டுச்செல்வது, நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் என எப்போதும் அனல் பறக்கும். ஆனால் இங்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பெண் எம்.பி.யிடம் காதலை வெளிப்படுத்திய சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. 

ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற உரையின் போதே, எம்.பி. ஒருவர் சக பெண் எம்.பி.யிடம் காதலை வெளிப்படுத்தி திருமணம் செய்து கொள்ள விருப்ப அழைப்பு விடுத்துள்ள சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

நோவா எர்லிச்

விக்டோரியா மாகாணத்தை சேர்ந்த தொழிலாளர் கட்சி எம்.பி.யான நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது யாருமே எதிர்பாராத வகையில், தனது காதலியான எம்.பி. நோவா எர்லிச்சை பார்த்து, நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டார்.

நோவா எர்லிச்

மேலும் தற்போது மோதிரம் கொண்டு வரவில்லை என்றும், பின்னிரவில் அதை தருவதாகவும் எம்.பி. அன்பை வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற அவையில் இருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் சுதாகரித்து காதலர்களுக்கு கரவொலி எழுப்பி ஆதரவை எதிர்த்தனர்.  எம்.பி. லாம்பர்டினுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது காதலை ஏற்றுக் கொண்ட நோவா எர்லிச் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web