அரசு பேருந்து மீது விசிக நிர்வாகி கல்வீச்சு.. பாஜக பொதுக்கூட்டத்துக்கு எதிர்ப்பு!

 
கருப்புக்கொடி

மத்திய பாஜக அரசின் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திண்டிவனத்தில் நேற்று நடைபெற இருந்தது. இந்த பொதுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, பாரதிய ஜனதா மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொள்ள இருந்தனர். 

ஆனால், இந்த கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று விசிக மாவட்ட செயலாளர் சேரன் தலைமையில் கட்சியினர் நேற்று முன்தினம் எஸ்பியை சந்தித்து மனு அளித்தனர். அதே நேரம் விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதால் எச்.ராஜாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என அறிவித்திருந்தனர். 

கருப்புக்கொடி

இதனால் திண்டிவனத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டதால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து முன்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக விசிக மாவட்ட நிர்வாகி தென்னரசு (41) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனால் திண்டிவனம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானதால் பாஜக பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 

அனுமதி மறுக்கப்பட்டதை அறிந்த பாஜவினர் திண்டிவனம் வண்டிமேடு வஉசி திடலில் திரண்டனர். மேலும் பாஜக மற்றும் விசிகவினர் திண்டிவனம் நகர பகுதிக்குள் வராத வகையில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கருப்புக்கொடி

இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க வந்த எச்.ராஜா குன்னம் அருகே கைது செய்யப்பட்டடார். இதனை அறிந்த பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சமுதாயக்கூடத்தில் அடைக்கப்பட்டு எச்.ராஜா மாலையில் விடுவிக்கப்பட்டார்.   இதனால் திண்டிவனத்தில் பதற்றம் நிலவியது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web