விஜய் டிவி சீரியல்களுக்கு எதிர்ப்பு!! இல்லத்தரசிகள் ஆக்ரோஷம்!!

 
ஈரமான ரோஜாவே


வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த தொலைக்காட்சி சீரியல்கள் தற்போது 6 நாட்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சி சீரியல்களுக்கு இல்லத்தரசிகள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகளவில் வரவேற்பு கிடைத்து வருவதே இதற்கு முக்கிய காரணம். சன் டிவி மட்டுமே அதிக அளவு சீரியல்களை ஒளிபரப்பின. தற்போது  அதற்கு போட்டியாக விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ், கலைஞர் டிவி எனப் பல  தொலைக்காட்சி சேனல்களும் மாறிமாறி  பல்வேறு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.

ஈரமான ரோஜாவே
போட்டி அதிகமாகி விட்டதால் சீரியல்கள் சினிமா ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. முந்தைய சீரியல்களில் நடுவில் பாடல்கள்  இருக்காது. முகச்சுளிப்பை ஏற்படுத்தும் சீன்கள் அறவே இல்லை. ஆனால் இப்போதைய சீரியல்கள்  கொஞ்சம் கொஞ்சமாக சினிமா ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டு வருவதாக  தொடர் சர்ச்சை கருத்துகளும், புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், தற்போதைய சீரியலில் லிப்லாக் காட்சிகள் மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம்பெற்று இருப்பதால் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. 

ஈரமான ரோஜாவே
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் ஈரமான ரோஜாவே.  இந்த சீரியலின்  முதல் சீசனுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தற்போது 2ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த சீரியலில் தான் லிப்லாக் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகள் இடம்பெற்று உள்ளன. இதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதோடு பெரும்பேசுபொருளாகவும் மாறி உள்ளது.ஈரமான ரோஜாவே சீரியலில் தனது அம்மாவின் அனுமதியின்று ஜேகேவை திருமணம் செய்துகொள்ளும் ரேகாவுக்கு முதலிரவு  காட்சி இடம்பெற்றுள்ளது.  இந்த சீனில்  இருவரும் முத்தம் கொடுத்து கொள்வதும், படுக்கையறையில் கட்டிப்பிடித்து ரொமான்ஸ் செய்யும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் இல்லத்தரசிகள் மத்தியில் முகசுழிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web