அதிமுகவில் ஓபிஎஸ்? இன்று அதிமுக செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவு!
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில் அ.தி.மு.க. பொதுக்குழு இன்று சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெறுகிறது. ஒரு பக்கம் செங்கோட்டையன், மறுபுறம் டெல்லி சப்போர்ட்டில் ஓபிஎஸ் என்று பதம் பார்த்து வரும் நிலையில், எடப்பாடி என்ன செய்யப் போகிறார் என்று தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.

கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடக்கிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். பொதுக்குழு உறுப்பினர்கள் 3000 பேர் உள்பட, மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பா.ஜ.க. வலியுறுத்தி வரும் அ.தி.மு.க. ஒன்றிணைப்பு விவகாரம் விவாதிக்கப்படுமா என்ற கேள்வி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து திரும்பியுள்ள நிலையில், அவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு வரும் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது. பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறும் இந்த பொதுக்குழு முக்கியத்துவம் பெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
