“எடப்பாடிக்கு ரொம்ப நல்ல மனசு” ஓபிஎஸ் பேட்டி!
தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவின் உட்கட்சி பூசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒபிஎஸ் இணையத் தயார் எனக் கூறிய பிறகும் அடுத்தடுத்து சலசலப்புகள் ஓயவில்லை ஓநாயும், வெள்ளாடும் ஒன்று சேர முடியுமா? என்று கூறி அறிக்கை வெளியிட்ட ஈபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல மனசு என ஓபிஎஸ் பதில் அளித்துள்ளார்.

காரைக்குடி அடுத்த தேவகோட்டையில் இது குறித்து ஓபிஎஸ் “ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? என ஈபிஎஸ் கேள்வி எழுப்புகிறார்.
எடப்பாடி பழனிசாமியின் வார்த்தை ஜாலம் நடைமுறைக்கு ஒத்து வராது. அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது மக்களாலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அறிக்கைவிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல மனசுதான். அதிமுக தொண்டர்கள் விஜய் கட்சிக்கு செல்வார்கள் என மருது அழகுராஜ் கூறுகிறார். உண்மையில் தூய அதிமுக தொண்டர்கள் யாரும் எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார்கள் என்பது தான் அதிமுக தொண்டர்களின் வரலாறு.

விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. தேர்தலில் நின்று மக்கள் செல்வாக்கை பெற்றால் தான் அவர் குறித்து கருத்து சொல்ல முடியும். திராவிட இயக்க வரலாறு இரு மொழி கொள்கைதான் என்பதை சட்டமன்ற தீர்மானம் மூலம் பல முறை தெளிவுபடுத்தி இருக்கிறோம். அதிமுக இணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது அதிமுக அடிமட்ட தொண்டர்கள் வரை உள்ள கருத்து. தேர்தலுக்கு ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது” எனக் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
