ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார்... தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு!
தமிழ்நாடு முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார். அவருடன் அவரது மகன் மற்றும் முன்னாள் எம்.பி. ரவீந்திரநாத் குமார்வும் கட்சியில் சேர்ந்தார். அண்ணா அறிவாலயம் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இணைந்த பிறகு பேசிய ஓ.பன்னீர்செல்வம், அண்ணா தொடங்கிய தாய்க்கழகத்தில் மனமகிழ்ச்சியுடன் சேர்ந்ததாக தெரிவித்தார். கருணாநிதி காட்டிய வழியில் ஸ்டாலின் ஆட்சியையும் கட்சியையும் முன்னெடுத்து வருகிறார் என்றார். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு பல நலத்திட்டங்கள் சென்றடைந்துள்ளதாக பாராட்டினார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாய்ப்பு கிடைத்தால் போட்டியிடுவேன் என்றும் கூறினார்.

மேலும் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் அதிமுகவில் தலைமைப் பண்பு இல்லை என கடுமையாக விமர்சித்தார். தென் மாவட்ட தலைவர்கள் வளர்வதை தடுக்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினார். எந்த அழுத்தமும் இல்லாமல் சுய முடிவில் திமுகவில் இணைந்ததாக தெரிவித்தார். வரும் தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமையும் என நம்பிக்கை வெளியிட்டார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
