ஓபிஎஸ் தாயார் காலமானார்!! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!!

 
ஓபிஎஸ் தாயார்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக வின் ஒருங்கிணைப்பாளருமான   ஓபிஎஸ் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர்.   இவரின் தாயார்  95 வயது ஓ.பழனியம்மாள். இவர் வயது மூப்பு  மற்றும் உடல்நலக்குறைவால்  காலமானார். நேற்று இரவு தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டார் .

நேற்று பழனியம்மாள் நாச்சியார் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமானது. அவருக்கு செயற்கை சுவாசம் அளித்தும்  வயது மூப்பு காரணமாக  மருத்துவ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து அவரை வீட்டுக்கு கொண்டு செல்ல அவருடைய குடும்பத்தினர் முடிவு செய்தனர். நேற்று பெரியகுளம் தெற்கு அக்ரகாரம் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் பழனியம்மாள் நாச்சியாரின் உயிர் பிரிந்தது. தாயார் மறைவு செய்தி கேட்டு ஓபிஎஸ் உடனடியாக சென்னையில் இருந்து தேனிக்கு விரைந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதிச்சடங்கு பெரியகுளத்தில் உள்ள வீட்டில் இன்று நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
தமிழக முதல்வர் ஸ்டாலின் ஓ பன்னீர் செல்வம் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "முன்னாள் முதல்வர்  அண்ணன் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்பதை அறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
 

ட்வீட்


ஓபிஎஸ்  மருத்துவமனை சென்று தாயின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்ட்தார்.  ஏற்கனவே ஜனவரி  5ம் தேதி பழனியம்மாள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 3 நாட்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. மீண்டும் நேற்று இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கட்சியினர் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web