அதிமுக ஒன்றிணைப்பே என் இலக்கு.... ஓபிஎஸ் பளிச்!
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் 9-வது நினைவு நாளை முன்னிட்டு, ஓ.பன்னீர்செல்வம் இன்று மெரினா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மகனும் ராமநாதபுரம் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் இணைந்திருந்தார். நினைவிடத்தில் அமைதியாக சில நொடிகள் நின்று மரியாதை செலுத்திய ஓபிஎஸ், அங்கு வந்த செய்தியாளர்களிடம் பேசினார்.

சமீபத்தில் டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது குறித்து விளக்கமளித்த அவர், “அது மரியாதை சந்திப்பு தான். ஆனால் அதிமுக ஒன்றிணைப்பைச் சுற்றி அரசியல் நிலவரம் பற்றி பேசினேன். எம்ஜிஆரும், அம்மாவும் கட்டியெழுப்பிய அதிமுகவின் பொற்காலத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பது தொண்டர்களின் ஒரே கோரிக்கை” என்று கூறினார். பிரிந்திருக்கும் அதிமுக பிரிவுகளை ஒன்றிணைப்பதற்காகவே அமித் ஷாவை சந்தித்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.

“என்னைப் பற்றி பரவி வரும் தனிக்கட்சி தொடங்கும் பேச்சுகள் அனைத்தும் பொய்யானவை. அதிமுக ஒன்றிணைப்பே என் ஒரே இலக்கு” என்று ஓபிஎஸ் தெளிவுபடுத்தினார். தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுடன் எந்தப் பேச்சும் நடக்கவில்லை என்றும் அவர் சிரித்தபடி கூறினார். டிசம்பர் 15-க்குள் ஓபிஎஸ் எடுத்து கொள்ளும் முடிவு குறித்து தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஒன்றிணைப்பு தோல்வியடைந்தால் அடுத்த கட்டம் என்ன என்பது அரசியல் வட்டாரங்களில் கேள்வியாய் உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
