கூட்டணி குறித்து ஓபிஎஸ் நாளை அறிவிப்பு… தமிழக அரசியலில் திடீர் திருப்பம்!
ஓ.பன்னீர்செல்வம் நாளை தனது கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் எந்த அணியுடன் இணைவது என்பது குறித்து, நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பிறகு முடிவு அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். நாளை காலை அல்லது மதிய நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வரை எந்த கட்சியுடனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. NDA அல்லது திமுக கூட்டணி என இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. நாளை வெளியாகும் முடிவு 2026 சட்டமன்றத் தேர்தல் அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
