ஸ்டாலினை சந்தித்த ஓ.பி.எஸ்... அரசியலில் அடுத்த பரபரப்பு!

 
Stalin Stalin

தமிழ்நாடு சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். ஓ.பி.எஸ். பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். திடீரென நடந்த இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது சாதாரண மரியாதை சந்திப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனான கருத்து வேறுபாட்டால் ஓ.பி.எஸ். தனியாக செயல்பட்டு வருகிறார். அவரது ஆதரவாளர்கள் சிலர் ஏற்கனவே திமுக மற்றும் தவெகவில் இணைந்துள்ளனர். கூட்டணி முடிவு தாமதமாக இருப்பதால் மேலும் பலர் மாற்று கட்சிகளுக்கு செல்லலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

மற்றுபுறம், ஓ.பி.எஸ். என்.டி.ஏ கூட்டணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஸ்டாலினை சந்தித்தது புதிய ஊகங்களை கிளப்பியுள்ளது. 2026 தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த சந்திப்பு அரசியல் உத்தியா அல்லது மரியாதை சந்திப்பா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!