அடுத்த 24 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... !

 
ஆரஞ்சு
 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு  ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மத்தியப் பிரதேசத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியது முதல் 55 மாவட்டங்களுக்கும் ஜூன் 30ம் தேதி வரையில், வழக்கத்தை விட 37 சதவிகிதம் அதிகமான மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

ஆரஞ்சு


இந்நிலையில், தொடர்ந்து கனமழை அதிகரிப்பதால், குவாலியர், பிந்து, மொரேனா, ஷியோபூர், தாஷா, உமாரியா, திண்டோரி, கட்னி, மாண்ட்லா மற்றும் பன்னா ஆகிய 10 மாவட்டங்களுக்கு, அடுத்த 24 மணிநேரத்திற்கு  இந்திய வானிலை ஆய்வு மையம் “ஆரஞ்ச் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதன்படி, குறிப்பிடப்பட்ட 10 மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்தில் 63.5 மி.மீ. முதல் 203.2 மி.மீ.  மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், நர்மதாபுரம், சிந்த்வாரா, பந்துரா, சியோனி மற்றும் பால்காட்  மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

ஆரஞ்சு அலர்ட்


மத்தியப் பிரதேசத்தில் இனிவரும் நாட்களில் அதிகப்படியான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படியும்  வழிபாட்டுத் தலங்களைத் தொடர்ந்து கண்காணிக்கும்படியும்  அதிகாரிகளுக்கு, மாநில முதல்வர் மோகன் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது